ஆனியன் கொத்து தோசை செய்முறை | Onion Bunch Dosa Recipe !





ஆனியன் கொத்து தோசை செய்முறை | Onion Bunch Dosa Recipe !

0
தேவையானவை

தோசை மாவு - 2 கப்

உப்பு-- சிறிது

பச்சை மிளகாய் - 2

காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கரம் மஸாலா பொடி - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை :
ஆனியன் கொத்து தோசை
முதலில் தோசைகளை வார்த்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணை விட்டு கடுகு, சீரகம் தாளித்து, 

அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், தேவையான உப்பு, காரப்பொடி, 

கரம் மஸாலா, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

அதிலேயே தோசைகளை சிறு துண்டங்களாக வெட்டிப் போட்டு 

மேலும் 5 நிமிடம் வதக்கி எடுத்து சட்டினியுடன் சாப்பிடவும். லன்ச் பாக்ஸுக்கு ஏற்ற உணவு இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)