சூப்பரான மூங் தால் கபாப் செய்வது எப்படி?





சூப்பரான மூங் தால் கபாப் செய்வது எப்படி?

0
ஒரு உணவை குச்சியில் சொருகி நெருப்பின் மேலே நேரடியாக  வைத்து சமைக்கும் பொது கபாப் என்று அழைக்கப் படுகிறது. இது மத்திய ஆசிய பகுதியில் தோன்றியதாக. 
மூங் தால் கபாப்
குறிப்பாக துருக்கி பகுதியில் உணவு சமைக்கப் பயன்படுத்திய முறையாகும். பின்னர் இது உலகம் முழுக்க பரவி அந்தந்த நாட்டிற்கு ஏற்ப மாறியுள்ளது. 

இந்த சுவையை கொண்டாடும் விதமாக ஜூலை இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக கபாப் தினம் கொண்டாடப் படுகிறது. 
ஹைதராபாத்தில் பிரபலமான ஷமி கபாப்கள், மட்டன் இறைச்சி, பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களால் தயாரிக்கப் படுகின்றன. கலவையானது நீள பஜ்ஜி போல உருட்டி பொன்னிறமாகும் வரை  வறுக்கப்படுகிறது. 

இந்த கபாப்கள் மென்மையான மற்றும் வெல்வெட் போன்று இருக்கும். சிக்கன் டிரம்ஸ்டிக் கபாப் என்று அழைக்கப்படும் டாங்டி கபாப், பஞ்சாபி ஸ்பெஷல் உணவுகளில் ஒன்றாகும். 

சிக்கனை, தயிர் மற்றும் இஞ்சி, பூண்டு மற்றும் கரம் மசாலா உள்ளிட்ட மசாலாப் பொருட்களின் கலவையில் ஊற வைத்து சுடப்படும்இது பஞ்சாபி தாலியில் முக்கிய உணவாக இருந்து வருகிறது.
என்னென்ன தேவை?

வேகவைத்த பாசிப்பருப்பு – 1 கப்,

புதினா விழுது, பச்சை மிளகாய் விழுது,

கொத்த மல்லித் தழை விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2,

பிரெட் ஸ்லைஸ் – 2.

எப்படிச் செய்வது?
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு  :

பாசிப்பருப்பை உட்கொள்வது மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. 

நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்தால், இந்த பருப்பை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன்களைத் தரும்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழு தெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும். 
ஜீரண மண்டலத்தை வலிமையாக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. 
இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

கோடை காலத்தில் இதை உட்கொண்டால், இது வயிற்றில் உள்ள சூட்டை நீக்க உதவுகிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)