கூட்டு சொதி குழம்பு செய்முறை / Mixing Sodhi Curry Recipe !





கூட்டு சொதி குழம்பு செய்முறை / Mixing Sodhi Curry Recipe !

0
தேவையானவை: 

கேரட்– ஒன்று, 

குடமிளகாய்– ஒன்று, 

உருளைக் கிழங்கு– ஒன்று, 

கத்திரிக்காய் – ஒன்று,

அவரைக் காய் – 4,

வேக வைத்த துவரம் பருப்பு – ஒரு கப்,

புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு,

சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்,

கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்,

தேங்காய்ப் பால் – 100 மில்லி,

எண்ணெய் – 4 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு,

செய்முறை:
கூட்டு சொதி குழம்பு

கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

குடமிளகாய், கத்திரிக் காய், அவரைக் காய், உருளைக் கிழங்கு எல்லா வற்றையும் ஓரளவு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்து காய்களை யும் வதக்கி உப்பு சேர்த்து, புளி கரைத்து விட்டு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும். 

வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பால் விட்டுக் கலக்கவும். கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு:

எல்லா காய்களும் மிச்சப் பட்டிருக்கும் போது இந்த குழம்பு தயாரிக்க லாம். 

தேங்காய்ப் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்து சேர்த்தும் கொதிக்க விட்டு இறக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)