சுவையான மான்ச்சூ சூப் செய்வது எப்படி?





சுவையான மான்ச்சூ சூப் செய்வது எப்படி?

0
நாம் எல்லோரும் கொலஸ்ட்ரால் என்ற கொடிய அரக்கனை பார்த்து பயப்படுகிறோம். இதில் இருந்து தப்ப நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை தவிர்க்கிறோம். 
மான்ச்சூ சூப்
இவைகளைப் பற்றி தவறான கருத்துக்கள் உருவாகி விட்டதால் இவற்றை நாம் தவிர்த்து வருகிறோம் என்பதே உண்மை. வெண்ணெய், நெய் இரண்டும் பால் பொருட்கள். 

பிறந்தவுடன் குழந்தைகளும், விலங்குகளும் தாய்ப்பாலைத் தான் முதலில் அருந்துகின்றன. அவர்களுக்காகவே படைக்கப்பட்ட உணவு பால். குழந்தைகள் நன்றாக வளர்வதற்கான அனைத்து சத்துக்களும் பாலில் உள்ளன.

வெண்ணெய்யை உட்கொள்வதால், இதில் நிறைந்துள்ள கொழுப்புக்களால் விரைவில் கொழுகொழுவென்று குண்டாகி விடுவோம் என்ற பயம் உள்ளது. 

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால், அக்காலத்தில் நம் முன்னோர்கள் வெண்ணெய்யைத் தான் பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
ஆகவே வெண்ணெய் ஆரோக்கியமற்றது என்று கூற முடியாது. அதே நேரம் அளவாக எடுத்து கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. வெண்ணெயில் கலோரிகள் அதிகம் உள்ளது. 

ஆகவே இதனை அளவாக சாப்பிட்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். வெண்ணெய்யில் லெசிதின் என்னும் பொருள் உள்ளது.

உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.
தேவையானவை

வெண்ணெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 1/4 கப்

கோஸ் - 1/4 கப்

பீன்ஸ் -1/4 கப்

கேரட் - 1/4 கப் ( காய்கள் அனைத்தும் பொடியாக நறுக்கியது)

துருவிய நூல்கோல் - 1/2 கப்

பேபிகார்ன் - 1/4 கப்

பீர்க்கங்காய் - 2 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)

தண்ணீர் - 2 கப்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை :
முதலில் கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சுட வைத்து காய்கறிகளை ஒவ்வொன் றாகப் போட்டு வதக்கவும்
பின் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காய்கறிகள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதித்தவுடன் இறக்கி வைத்து நறுக்கிய வெங்காயத் தாளுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)