அருமையான மிக்ஸ்ட் ப்ரூட் இட்லி செய்வது எப்படி?





அருமையான மிக்ஸ்ட் ப்ரூட் இட்லி செய்வது எப்படி?

0
உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. 
ஃப்ரூட் இட்லி
உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். 

பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில்  இருந்து வந்ததே ஆகும். 

இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன.

உலர் பழங்கள் வெகு  எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான  ஆரோக்கியத்தை அடையலாம்.

தேவையானவை

இட்லி மாவு - ஒரு கிலோ

மிக்ஸ்டு ஃப்ரூட் - 200 கிராம்

பாதாம் பருப்பு - தேவையான அளவு

முந்திரிப்பருப்பு - தேவையான அளவு

செய்முறை :
இட்லி மாவை நன்றாக மென்மையான இட்லி சுடும் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் இட்லி சட்டியை வைத்து அதனுள் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். 

அதனை சூடாக்கி பின்னர் இட்லி தட்டில்  மாவை ஊற்றி பின்பு தேவையான அளவு அதன் மீது மிக்ஸ்ட் ஃப்ரூட் தூவி விடவும். 

பிறகு பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து தூவி இட்லியாக வேக வைக்கவும். பின்பு இட்லி வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)