பருப்பு நெய் சாதம் செய்முறை / Dal Ghee Rice Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை

பச்சரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு - அரை கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

பூண்டு - 10 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

நெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவை யான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :
 பருப்பு நெய் சாதம்
முதலில் அரிசியை யும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். 

பூண்டைத் தோல் உரித்துக் கொள்ளுங்கள். 

அரிசி, பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச் சேர்த்து, 
குக்கரில் வைத்து மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்

பிறகு, நெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். 

இந்த ‘பாத்’ துக்கு அப்பளம் அல்லது உருளைக் கிழங்கு பொரியல் நல்ல சைட் டிஷ்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚