காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?





காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?

0
காஞ்சிபுரம்  கோவில் நகரம், ஆயிரம் கோவில்களின் நகரம், திருவிழாக்களின் நகரம் என்று பலவாறு அழைக்கப் படுகிறது. இது பாலாறு மற்றும் வேகவதி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 
காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் பல கோயில்கள் உள்ளன. 
இந்தியாவிலேயே அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம், வரலாற்றை அதன் அனைத்து தன்மைகளிலும் உயிர்ப்பிக்கும் இடமாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோயில் ஸ்தலங்களுக்கு எப்படி பிரசித்தி பெற்றதோ அதே போல் காஞ்சிபுரம் இட்லியும் உலகம் முழுவதும் அறியப்படும் உணவாக இருந்து வருகிறது. 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் காஞ்சிபுரம் இட்லி மிளகும் நெய்யும் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 2௦௦ கிராம்

பச்சரிசி – 2௦௦ கிராம்

உளுத்தம் பருப்பு – 1௦௦ கிராம்

தயிர் – 2௦ மில்லி லிட்டர்

முந்திரி – எட்டு

சீரகம் – ஒரு தேகரண்டி

இஞ்சி – ஐந்து கிராம்

உப்பு – தேவைகேற்ப

மிளகு – அரை தேகரண்டி

பச்சை மிளகாய் – இரண்டு
செய்முறை . :

அரிசி மற்றும் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். சிறிது நறநற வென்று கெட்டியாக அரைத்து கொண்டு உப்பு சேர்த்து கலக்கவும்.

ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடவும். மறுநாள் ஒரு கப் தயிர், முந்திரி, முழு மிளகு, சீரகம், நெய்யில் வறுத்த சிறுதுண்டு இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவில் சேர்க்கவும். 

டம்லரில் மாவை ஊற்றவும். இட்லி பாத்திரத்தில் இருபது நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். பல வகையான சட்னியுடன் பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)