நார்ச்சத்து அதிகம் உள்ள கார்ன் காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?





நார்ச்சத்து அதிகம் உள்ள கார்ன் காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி?

0
காலிபிளவரில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்குமேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது என்பது சமையல் வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கிறது. 
நார்ச்சத்து அதிகம் உள்ள கார்ன் காலிஃப்ளவர் சூப் செய்வது
நடுத்தர வயதினர் மற்றும் வயதானவர்களுக்கு உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை காலிபிளவருக்கு அதிகமுண்டு.

காலிபிளவர் புற்று நோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவ தாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

காலிஃப்ளவரரில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும்.

இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.

தேவையானவை:

காலிஃப்ளவர் (பொடியாக நறுக்கியது) – ஒரு கப்,

ஸ்வீட் கார்ன் (உதிர்த்தது) – ஒரு கப்,

மிளகுத் தூள் – கால் டீஸ்பூன்,

சோள மாவு – ஒரு டீஸ்பூன்,

வெண்ணெய் – கால் டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – சிறிதளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கார்ன் காலிஃப்ளவர் சூப்
காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து, அதில் சோள மாவை கரைத்து விட்டு.. உப்பு, மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கவும். நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

குறிப்பு:

இதே முறையில் கோஸ், கேரட், பட்டாணியிலும் சூப் தயாரிக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)