சுவையான சைனீஸ் ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை செய்வது எப்படி?





சுவையான சைனீஸ் ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை செய்வது எப்படி?

0
ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ராக்கோலி கருதப்படுகிறது. 
சுவையான சைனீஸ் ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை செய்வது எப்படி?
ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன. 

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. 
உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது அல்லது குறைவாக இருக்கும். 

ஆனால் ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

சரி இனி ப்ரோகோலி கொண்டு சுவையான சைனீஸ் ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை

ப்ரோகோலி - 1 கப்

சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

சிக்கன் ஸ்டாக் அல்லது வெஜ் ஸ்டாக் க்யூப் - சிறிதளவு

கார்ன் ஃப்ளார் - 1 1/2 தேக்கரண்டி
தமிழக எம்.பிக்களின் குரல் எடுபடுமா? மக்கள் எதிர்பார்ப்பு !
செய்முறை :
சுவையான சைனீஸ் ப்ரோகோலி ஸ்டிர் ஃப்ரை செய்வது எப்படி?
முதலில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின் 1மேசைக்கரண்டி உப்பு சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும். 

ப்ரோகோலி பூக்களை அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வடித்து வைக்கவும்.

நான் ஸ்டிக் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக வெட்டிய பூண்டு சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். ப்ரோகோலி சேர்த்து ஸ்டாக் க்யூப், சோயா சாஸ், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 
கார்ன் ஃப்ளோரை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறி செமி சாலிட் ஆக இறக்கவும். சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)