கேப்சிகம் ரைஸ் அல்லது குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?





கேப்சிகம் ரைஸ் அல்லது குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?

0
குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். 
கேப்சிகம் ரைஸ் அல்லது குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.  குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. 

புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. 
பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாயை  பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

சரி இனி குடைமிளகாய் கொண்டு ருசியான அசத்தலான சுவையான கேப்சிகம் ரைஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை:

அரிசி - 250 கிராம்,

குடைமிளகாய் - 2,

பெரிய வெங்காயம் - 2,

நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - 4 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கேப்சிகம் ரைஸ் அல்லது குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி?
அரிசியை ஒரு பங்குக்கு இரண்டரை பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். 

குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். இப்போது சிக்கன் நூடுல்ஸ் ரெடி. நறுக்கிய கொத்து மல்லி சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:

குடைமிளகாயுடன் பேபி கார்ன், புதினா சேர்த்தும் தயாரிக்கலாம். இந்த குடைமிளகாய் புலாவ் உடன் தொட்டுக் கொள்ள எதுவுமே தேவையில்லை.

கொஞ்சம் உருளைக்கிழங்கு சிப்ஸ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)