டேஸ்டியான குடை மிளகாய் சட்னி செய்வது எப்படி?





டேஸ்டியான குடை மிளகாய் சட்னி செய்வது எப்படி?

0
குடைமிளகாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது சைனீஸ் வகை உணவுகள் தான். குறிப்பாக பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு உணவு வகைகளில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். 
டேஸ்டியான குடை மிளகாய் சட்னி செய்வது எப்படி?
சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் குடை மிளகாய், ஹோட்டல்களில் பல வகை உணவை அழகுபடுத்த பயன்படுகின்றன.

காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது. ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான சத்துணவு சாப்பிட விரும்புபவர்கள் குடைமிளகாயை தவறாமல் சேர்த்துக் கொள்வது நல்லது. 

இந்த குடைமிளகாயில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா? ஆம், குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
காரம் குறைவாக காணப்படும் குடை மிளகாய் ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுகளில் பயன்படுத்தப் படுகிறது. குடை மிளகாயில் அபிஜெனின், குவெர்செடின், கேப்சியேட் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன.

குடை மிளகாயில் நம் கண்களை பாதுகாக்கும் கரோட்டின்கள் உள்ளது. சிவப்பு குடை மிளகாயில் உள்ள கேப்சந்தின் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.

குடை மிளகாயில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. குடை மிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
குடை மிளகாய் சாப்பிடுவது ப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேவையான பொருட்கள் 

குடைமிளகாய் - 2 பெரியது

பச்சை மிளகாய் - 4

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் சிறிய துண்டு - 1

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை 
டேஸ்டியான குடை மிளகாய் சட்னி செய்வது எப்படி?
சின்ன வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். 

அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். 
இவை யாவும் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். 

கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)