பப்பாளி இட்லி செய்வது எப்படி?





பப்பாளி இட்லி செய்வது எப்படி?

0
பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. பப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. 
பப்பாளி இட்லி
இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மதிய உணவுக்கு முன் கிடைக்கும் இடைவேளையில் பப்பாளி சாப்பிட்டால் நார்ச்சத்து கிடைக்கும். இதனால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.

பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. பப்பாளிப் பழத்துக்கு மற்ற பழங்களை மென்மையடையச் செய்யும் சக்தியும் உள்ளது. 

பப்பாளி சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. சரி இனி பப்பாளி பயன்படுத்தி பப்பாளி இட்லி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

தேன் – 100 கிராம்

பப்பாளிப் பழம் – 1

செய்முறை :

இட்லி மாவை நன்றாக மென்மையான இட்லி சுடும் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் தேவையான அளவு இட்லி மாவை எடுத்துக் கொண்டு பப்பாளிப் பழத்தைத் துண்டுகளாக்கியோ அல்லது மிக்ஸியில் அரைத்து சாஸ் போலவோ செய்து கொள்ளவும். 

பிறகு சிறிது நேரம் ஊற வைத்து அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.  பின்னர் அடுப்பில் இட்லி சட்டியை வைத்து அதனுள் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். 

அதனை சூடாக்கி பின்னர் இட்லி தட்டில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைக்கவும். வித்தியாசமான இந்த இட்லி சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது. இப்போது சாப்பிடுவதற்கு ருசியான பப்பாளி இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)