சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?





சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?

0
பீட்ரூட்டை உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பீட்ரூட்டை மற்ற சமயங்களில் சாப்பிடுவதை விடவும் குளிர் காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 
சுவையான பீட்ரூட் அல்வா செய்வது எப்படி?
பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் என்பது நமக்குத் தெரியும். இநத பீட்ரூட் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும். 

காரமான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டாலோ அல்லது முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 

அப்படி அல்சரால் அவதிப்படுகிறவர்கள் பீட்ரூட்டை தங்களுடைய உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.

வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். 

சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். 

மேலும் இதில் உள்ள நைட்ரிக் ஆக்சைடு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். பீட்ரூட்டை தினமும் சாப்பிட்டு வர உடல் வலிமை அதிகரிக்கும். மாதத்தில் நான்கு நாட்கள் பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொள்வதால் உடல் உறுப்புகள் சுத்தமடையும்.

தேவையானவை . :

பீட்ரூட் - 2

சர்க்கரை - 1 1/2 கோப்பை

கண்டென்ஸ்டு மில்க் - 2 மேஜைக் கரண்டி

பால் - 2 மேஜைக் கரண்டி

நெய் - 1/2 கோப்பை

ஏலக்காய் - 4

உலர்ந்த திராட்சை - 5

வறுத்த முந்திரி - 10

செய்முறை : .

முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். துருவிய பீட்ரூட்டை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் நெய், அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகிய வற்றை போட்டு வேக விடவும். 

வேகும் போது நன்கு கிளறி விடவும்.நன்கு பதமாக வெந்ததும், அடுப்பி லிருந்து இறக்கி, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும்.

குறிப்பு 

உடலில் அதிக இரும்புச் சத்து உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள சில கூறுகள் உடலில் இரும்பு மற்றும் தாமிரத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன. 

எனவே அதிக அளவு இரும்புச் சத்து உள்ளவர்கள் ஒரு சில நாட்களுக்கு பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)