சுவையான பீட்ரூட் பிரியாணி செய்வது எப்படி?





சுவையான பீட்ரூட் பிரியாணி செய்வது எப்படி?

0
பீட்ரூட் என்பது பூமிக்கடியில் விளையும் ஒரு காய்கறி வகையாகும், மற்றும் அதில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் தான் அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பார்கள். 
சுவையான பீட்ரூட் பிரியாணி செய்வது எப்படி?
பீட்ரூட்டை பல வழிகளில் உட்கொள்ளலாம், அதை காய்கறிகள், சாலடுகள் மற்றும் பழச்சாறுகள் போன்ற வடிவில் உட்கொள்ளலாம். பலருக்கு இதன் ருசி பிடிக்காது. 

ஆனால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு தெரிந்தவர்கள் கண்டிப்பாக தினசரி உணவில் இதை சேர்த்துக்கொள்வார்கள்.பீட்ரூட் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

இதனால் பல நோய்கள் மற்றும் தொற்றுகளில் இருந்து நாம் காப்பாற்றப் படுகிறோம். குறிப்பாக அதன் ஜூஸ் மற்றும் சாலட் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட்டை கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

இது இயற்கையான சர்க்கரையின் வளமான மூலமாகும், இது நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. சரி இனி பீட்ரூட் பயன்படுத்தி சுவையான பீட்ரூட் பிரியாணி செய்வது எப்படி?என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

பீட்ரூட் (சிறியது) - 2

வெங்காயம் - ஒன்று

எண்ணெய் + வெண்ணெய் - ஒரு மேசைக் கரண்டி

உப்பு - தேவைக்கு

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு

சோம்பு - அரை தேக்கரண்டி

பிரியாணி இலை - ஒன்று

பிரியாணி மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி

சாம்பார் தூள் /  மிளகாய் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - ஒன்று

புதினா - ஒரு கைப்பிடி

கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி

தயிர் - 2 மேசைக் கரண்டி

தக்காளி - ஒன்று

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரி - 10

செய்முறை :
பீட்ரூட் பிரியாணி
வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைக்கவும். தக்காளியுடன் கொத்த மல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும். 

பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கி, 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகிய வற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். 

பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கவும். பின் தயிர் சேர்த்து பிரட்டவும். ஒன்றரை கப் நீர் விட்டு கொதித்ததும், அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு சிறுந்தீயில் மூடி வேக விடவும்.

முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)