தேங்காய் பால் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?





தேங்காய் பால் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

0
சிக்கன் குழம்பு எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்து விடும். 
தேங்காய் பால் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் 
இது.இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப் பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ

சமையல் எண்ணெய் – தேவையான அளவு.

சின்ன வெங்காயம் – 150 கிராம்

தக்காளி – இரண்டு (பெரியது)

பச்சை மிளகாய் – மூன்று

வர மிளகாய் – இரண்டு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சிக்கன் மசாலா தூள் – மூன்று தேக்கரண்டி

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கடுகு – அரை தேக்கரண்டி

தேங்காய் – ஒரு மூடி (தேங்காய் பால்)

கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு
தக்காளி, கொத்தமல்லி, சின்ன வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் வதக்கவும். 

அடுத்து அதில் சிக்கன் மசாலா தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறி மூடி வேக வைக்கவும்.
பாதியாக சிக்கன் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும்.
தேங்காய்ப் பால் வற்றி, திக்கான குழம்பு நிலைக்கு வரும் வரை வைத்திருக்க வும்.

கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)