ரவா, சேமியா, காய்கறி கிச்சடி செய்வது எப்படி?





ரவா, சேமியா, காய்கறி கிச்சடி செய்வது எப்படி?

ரவையில் புரதச் சத்து அதிகம். ரவா உப்புமா சாப்பிடும் ஒவ்வொருமுறையும் நம் உடம்புல 6 கிராம் அளவுக்கு புரதச் சத்து ஏறும்னு சொல்றாங்க. அது மட்டுமல்ல இதில் விட்டமின் பி சத்தும் அதிகம். 
ரவா, சேமியா, காய்கறி கிச்சடி செய்வது எப்படி?
அதாவது கைக்குத்தல் அரிசியில் இருக்கறதா சொல்லப்படக் கூடிய ஃபோலேட் மற்றும் தயமின் சத்துக்கள் ரவையிலும் உண்டாம். இது நம்மை ஆற்றலோடு இயங்க வைக்கறதோட மூளைச் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்ங்கறாங்க. 

செமோலினா ரவையின் அடுத்த சிறப்பு அதிலிருந்து கிடைக்கக் கூடிய செலினியம்ங்கற வேதிப்பொருள். இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு இதய நோய்களை கட்டுப்படுத்தும் காரணியா விளங்குது. 

சண்டே மார்னிங், இன்னைக்கு நான்வெஜ் டே. மார்னிங் சமைக்க காய்கறி எல்லாம் எதுவும் கிடையாது. மத்யான, வேற ஹெவி லஞ்ச் சாப்பிடப் போறோம். 

அதனால காலையில லைட்டா உப்புமா சாப்பிட்டா போதும்... ராத்திரி திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்க, சாப்பிடாம வேற வந்துட்டாங்க, சட்டுன்னு அவங்களுக்கு என்ன சமைச்சுத் தர்றது, அட ரவை இருக்கப் பயமேன்.

தேவையானப் பொருள்கள்:
ரவை _ ஒரு கப்

சேமியா _ 2 கப்

சின்ன வெங்காயம் _ 7 லிருந்து 10 க்குள்

பச்சைப் பட்டாணி _ ஒரு கைப்பிடி

கேரட் _ 1 (சிறியது)

இஞ்சி _ ஒரு சிறு துண்டு

பூண்டு _ 2 பற்கள்

பச்சை மிளகாய் _ 2

மஞ்சள் தூள் _ 1/2 டீஸ்பூன்

உப்பு _ தேவைக்கு

கொத்துமல்லி இலை _ ஒரு கொத்து

எலுமிச்சை சாறு _ 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் _ ஒரு டீஸ்பூன்

கடுகு

உளுந்து

கடலைப் பருப்பு

சீரகம்

முந்திரி

பெருங்காயம்

கிராம்பு _ 1

பிரிஞ்சி இலை _ 1

கறிவேப்பிலை

செய்முறை:
ரவா, சேமியா, காய்கறி கிச்சடி செய்வது எப்படி?
பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டை சிறுசிறு நீளத்துண்டுக ளாகவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும், மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.
இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்து தனியாக வைக்கவும்.

எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில் கொட்டிக் கிளறும் போது கட்டி தட்டாமல் இருக்கத் தான். அடுத்து அதே வாணலி யில் சேமியாவைப் போட்டு சிறிது சூடு வர வறுத்துக் கொண்டு, இதையும் தனியாக வைக்கவும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து விட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.

அடுத்து இஞ்சி, பூண்டு வதக்கி விட்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு என தண்ணீர் விட்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைகவும்.

கொதி வந்ததும் சேமியாவைப் போட்டுக் கிளறவும். அது பாதி வெந்து வரும் போது ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி whisk ஆல் விடாமல் கிண்ட வேண்டும்.
அப்போது தான் கட்டித் தட்டாமல் வரும். எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி, கொத்து மல்லி தூவி இறக்கவும்.

சேமியா பாதி வெந்த பிறகு தான் ரவையைச் சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாகச் சேர்த்தால் ரவை வெந்து சேமியா வேகாமல் போகும். உப்புமா வகைகளுக்கேயுரிய‌ தேங்காய் சட்னி தான் இதற்கும் பொருத்த மாக இருக்கும்.
Tags: