கேழ்வரகு – காய்கறி உப்புமா செய்முறை | Ragi - Vegetable Salt Dish Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
கேழ்வரகு – காய்கறி உப்புமா

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 1 கப்

கேரட் – 50 கிராம்

பீன்ஸ் – 50 கிராம்

உருளைகிழங்கு – 50 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

தாளிக்க :

கடுகு, உளுந்தம் பருப்பு, எண்ணெய்.

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்த மல்லி, உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை 

ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி

அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.

* காய்கறிகள் வெந்தவுடன் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.

* தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும்.

* சத்தான கேழ்வரகு – காய்கறி உப்புமா ரெடி.
கேழ்வரகு – காய்கறி உப்புமா செய்முறை | Ragi - Vegetable Salt Dish Recipe ! கேழ்வரகு – காய்கறி உப்புமா செய்முறை | Ragi - Vegetable Salt Dish Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 23, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚