சூப்பரான கேழ்வரகு தோசை சட்னி செய்வது எப்படி?





சூப்பரான கேழ்வரகு தோசை சட்னி செய்வது எப்படி?

0
கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன. ஆரோக்கியமான உணவு ஆகும். 
சூப்பரான கேழ்வரகு தோசை சட்னி செய்வது எப்படி?
இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. 

இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது. கால்சியம் சத்து பெற கேழ்வரகு சிறந்த உணவு. பால் பொருட்களை விரும்பாதவர்களுக்கு கால்சியம் கிடைக்க கேழ்வரகை எடுத்துக் கொள்ளலாம். 

100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எனவே எலும்பு, பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க கேழ்வரகு சாப்பிடலாம். கோதுமையுடன் ஒப்பிடுகையில் கேழ்வரகு நீரிழிவு நோயாளிக்கு சிறந்த பலன் அளிக்கிறது. 

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தது. நீண்ட நேரம் பசியும் எடுக்காது.  
மனப்பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற மன ரீதியான பிரச்னைகளை சந்திப்பவர்கள் கேழ்வரகு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கலாம். 

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக்கியமாக டிரிப்டோபன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால், அவை இயற்கையான வகையில் ஓய்வு நிலையை தருகிறது.
2000 ஆம் ஆண்டில் MedIndia நடத்திய ஆய்வின்படி, கேழ்வரகு நுகர்வு ஒற்றைத் தலைவலிக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் குறைந்தபட்சம் கேழ்வரகு பிஸ்கெட் கூட சாப்பிடலாம். 

சரி இனி கேழ்வரகு மாவு பயன்படுத்தி சூப்பரான கேழ்வரகு தோசை சட்னி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 200 கிராம்,

கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

பெருங்காயத் தூள் -  சிறிதளவு,

எண்ணெய் - 100 மி.லி

செய்முறை:
கேழ்வரகு தோசை சட்னி

கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத் தூள், கடுகு சேர்த்துத் தாளித்து, தோசை மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 
தோசைக் கல்லைக் காய வைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இரு புறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக் கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)