பனீர் ராப் செய்முறை | Paneer Rap Recipe !





பனீர் ராப் செய்முறை | Paneer Rap Recipe !

0
தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்,

மைதா – அரை கப்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு. பூரணம் செய்ய:

காலிஃப்ளவர் (துருவியது) – கால் கப்,

பனீர் (துருவியது) – ஒரு கப்,

கீறிய பச்சை மிளகாய் – 3,

நறுக்கிய கொத்த மல்லி – 2 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
பனீர் ராப்
கோதுமை மாவு, மைதா, உப்பு, எண்ணெயை சேர்த்துப் பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து 

சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்திகள் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி… பச்சை மிளகாய், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். 

காய் வெந்தவுடன் பனீர், உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கினால், பூரணம் ரெடி. 

இதை சப்பாத்தியின் உள்ளே வைத்து ரோல் செய்தால்…  பனீர் ராப் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)