பனீர் கபாப் செய்முறை | Paneer Kabap Recipe !





பனீர் கபாப் செய்முறை | Paneer Kabap Recipe !

0
தேவையானவை:

வாழைக்காய் – ஒன்று,

துருவிய பனீர் – ஒரு கப்,

பொட்டுக் கடலை மாவு – கால் கப்,

பச்சை மிளகாய் – 4,

கொத்த மல்லி – 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பனீர் கபாப்

வாழைக்காயை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். 

இதனுடன் துருவிய பனீர், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்த மல்லி, உப்பு, இஞ்சித் துருவல், 

பொட்டுக் கடலை மாவு சேர்த்துப் பிசையவும் (தேவைப் பட்டால் சில சொட்டுகள் தண்ணீர் சேர்க்கலாம்).

பிசைந்த கலவையை விரல் நீள வடிவில் அல்லது விருப்பப்பட்ட வடிவில் செய்து கொள்ளவும். 

கடாயில் எண்ணெயை சூடாக்கி, செய்து வைத்ததை பொரித்தெடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)