சுவையான மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி?





சுவையான மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி?

0

குழந்தைகள் எல்லாருக்கும் பிடித்த உணவு என்றால் அது ஐஸ் கிரீம் தான். ஐஸ் கிரீம் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் வரை பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை டேஸ்ட் பாக்காமல் இருந்திருக்க முடியாது. 

சுவையான மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி?
திருமணத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் வைத்தால், அதற்காக தனி கூட்டமே இருக்கும். மெரினா போன்ற கடற்கரைக்கு சென்றாலும் பெரும் பாலானோரின் தேர்வு ஐஸ் வாங்கி சாப்பிடுவதாக தான் இருக்கும்.

சிறிய வயதில் சிலர் குச்சி ஐஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கும். ஓவ்வொரு நிறங்களில் ஒவ்வொரு சுவையில் நண்பர்களுடன் குச்சி ஐஸ் சாப்பிட்ட அழகான நினைவுகள் பலரிடமும் இருக்கும். 

குழந்தைகளுக்கு விருப்பமான குச்சி ஐஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இன்று மாம்பழம் சேர்த்து குளுகுளு மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
என்னென்ன தேவை?

பால் – அரை லிட்டர்,

அரிசி மாவு – 2 டீ ஸ்பூன்,

சீனி – 100 கிராம்,

பாதாம் – சிறிது

முந்திரி – சிறிது

மாம்பழம் – 1

எப்படி செய்வது?
சுவையான மாம்பழ குச்சி ஐஸ் செய்வது எப்படி?
பாலை நன்கு வற்ற காய்ச்சவும். அரிசி மாவுடன் சீனியை கலந்து கொண்டு சிறிது சிறிதாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் போட்டு கட்டி பிடிக்காமல் கலக்கவும்.

அல்லது மாவை தண்ணீரில் கரைத்தும் சேர்க்கலாம். சுமார் 5 நிமிடங்கள் விடாமல் கிளற வேண்டும். மாவு நன்கு வெந்து, கலவை கெட்டியானதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி துண்டுகளை போட்டு கலக்கி இறக்கி ஆற விடவும்.
இதற்கிடையே மாம்பழத்தை தோல் சீவி நீளநீள துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். பால் அரிசி மாவு கலவை ஆறியதும் அதில் மாம்பழ கூழ் சேர்த்து கலக்கவும். பின்னர் இதை குல்பி அச்சில் ஊற்றி பிரீசரில் வைக்கவும்.

குல்பி அச்சு இல்லாதவர்கள் சிறிய கிண்ணங்களில் ஊற்றி பிரீசரில் வைக்கலாம். மாம்பழ குல்பி உறைந்ததும் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மாம்பழ குச்சி ஐஸ் ரெடி.!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)