அருமையான மாம்பழ சீஸ் கேக் செய்வது எப்படி?





அருமையான மாம்பழ சீஸ் கேக் செய்வது எப்படி?

0
தமிழகத்தில் இப்போதே ஆங்காங்கே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.இன்னும் சில வாரங்களில் கோடை காலம் ஆரம்பமாகி விடும். கோடை காலத்தில் அதிகமாக கிடைக்க கூடிய சீசன் ஃப்ரூட்ஸ்களில் மாம்பழமும் ஒன்று. 
அருமையான மாம்பழ சீஸ் கேக் செய்வது எப்படி?
பொதுவாக மாம்பழம் வைத்து ஜூஸ் செய்து நாம் அடிக்கடி செய்து சாப்பிடுவோம். இன்று நாம் மாம்பழம் வைத்து டேஸ்ட்டான மாம்பழ சீஸ் கேக்கினை செய்ய உள்ளோம். 

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை மிக சிறப்பாக இருக்கும். டேஸ்ட்டான மாம்பழ சீஸ் கேக்கினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:

மாம்பழ ஜூஸ் - 1/2 கப்

பிஸ்கட் - 1/2 பாக்கெட்

சீஸ் - 50 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

பட்டர் - 20 கிராம்

தயிர் - 2 ஸ்பூன்

லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்

ஜெலடின் - 1 ஸ்பூன்

ஸ்ட்ராபெர்ரி -3

மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு

செய்முறை:
மாம்பழ சீஸ் கேக்
முதலில் பட்டரை உருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிஸ்கட்டை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று சர்க்கரையை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

ஜெலடினை சூடான தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாம்பழத்தை வெட்டிக் கொண்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

சீஸ்ஸீனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பௌலில் உருக்கி வைத்துள்ள பட்டர் எடுத்துக் கொண்டு அதில் பொடித்த வைத்துள்ள பிஸ்கட் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ள வேண்டும். 
இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் ஸ்ப்ரெட் செய்து கொள்ள வேண்டும். இப்போது இதில் கரைத்து வைத்துள்ள ஜெலட்டின், செய்து வைத்துள்ள மாம்பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

அடுத்தாக லெமன் ஜூஸ், சீஸ்,, கெட்டி தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு பின் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் எடுத்துக் கொண்டு 1 சுற்று சுற்றிக் கொண்டு அதனை மோல்டிங் ட்ரே அல்லது தட்டில் ஊற்றி கொள்ள வேண்டும். 
பின் இந்த ட்ரேயை ஃப்ரீஸரில் சுமார் 2 மணி நேரம் வரை வைத்துக் கொள்ள வேண்டும். 

கலவை சற்று கெட்டியானவுடன் ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும் வெட்டி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளை தூவி பரிமாறினால் சுவையான மாம்பழ சீஸ் கேக் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)