வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை ரெசிபி | Ladyfinger Sponge Dosa Recipe !





வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை ரெசிபி | Ladyfinger Sponge Dosa Recipe !

0
தேவையானவை:

புழுங்கல் அரிசி – ஒன்றரை கப்,

காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் – 2,

வெண்டைக்காய் – 100 கிராம்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க:

பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கொத்த மல்லித் தழை – தேவைக்கேற்ப.
செய்முறை:

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். 

பாதி அரைபட்டதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை புளிக்க விடவும்.

பிறகு, தாளிக்க கொடுத்துள்ள வற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு 

இரண்டு கரண்டி மாவை விட்டு, தேவைப் பட்டால் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, 

அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரித்து சுட்டெடுத்தால்… 

வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை தாயார். இதனைத் திருப்பிப் போடத் தேவை யில்லை.

குறிப்பு:

இது, மூளை நன்கு வேலை செய்ய உதவுவதுடன், பெரியவர் களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை சரி செய்யும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)