ஜிஞ்சர் புலாவ் செய்முறை / Jinger Pulau Recipe ! ஜிஞ்சர் புலாவ் செய்முறை / Jinger Pulau Recipe ! - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

ஜிஞ்சர் புலாவ் செய்முறை / Jinger Pulau Recipe !

தேவையானவை:

துருவிய இஞ்சி – 10 டீஸ்பூன்,

பாசுமதி அரிசி – ஒரு கப்,

சீரகம் – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய் (அ) நெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
ஜிஞ்சர் புலாவ்

பாசுமதி அரிசியை ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேக விடவும். 

வாணலியில் நெய் (அ) எண்ணெய் விட்டு, துருவிய இஞ்சியை வதக்கி, சீரகம் சேர்த்துக் கலந்து,

வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்தால்… ஜிஞ்சர் புலாவ் தயார்.

குறிப்பு:

பசி யெடுக்கவும், சாப்பிட்ட உணவு செரிக்கவும் இஞ்சி கை கொடுக்கும்.