சுரைக்காய் பச்சடி செய்முறை | Gourd Pachadi Recipe !





சுரைக்காய் பச்சடி செய்முறை | Gourd Pachadi Recipe !

என்னென்ன தேவை?

சுரைக்காய் - 300 கிராம்,

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

நறுக்கிய மல்லித்தழை - சிறிது,

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,

புளிக்காத தயிர் - 200 மி.லி.,

சீரகம் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கவும்).

எப்படிச் செய்வது?
சுரைக்காய் பச்சடி

சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். 

தவாவில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், சீரகத்தைச் சேர்த்து வதக்கி, சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும்.

பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். 

சூடு ஆறியதும் தயிர் சேர்த்து, மல்லித் தழையால் அலங்கரித்து காலி ஃப்ளவர் புதினா சாதம், தக்காளி சாதத்துடன் பரிமாறவும்.
Tags: