அருமையான போக்காச்சா செய்வது எப்படி?





அருமையான போக்காச்சா செய்வது எப்படி?

0
முற்றிலும் தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுபவர்களுக்கு ஈஸ்ட் வைட்டமின் பி 12 இன் முக்கிய ஆதாரமாகும், ஏனெனில் இந்த ஊட்டச்சத்து முழுமையாக பதப்படுத்தப்படாத தாவர உணவுகளில் காணப்படவில்லை.
அருமையான போக்காச்சா செய்வது எப்படி?
ஒரு ஆய்வில் நான்கு வருடங்கள் வரை ஒரு குறிப்பிட்ட சைவ உணவைப் பின்பற்றியவர்களில் பட்டியலில் ஊட்டச்சத்து ஈஸ்ட் சேர்க்கப்படுவது. 

தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பவர்களுக்கு அவர்களின் பி 12 தேவைகளைப் பூர்த்தி செய்ய இது உதவியது என்று கண்டறியப்பட்டது. 

ஊட்டச்சத்து வாய்ந்த ஈஸ்ட் நம் உடலின் அனைத்து ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. இதில் உள்ள உயர்தர புரதம் மற்றும் வைட்டமின் பி ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகங்கள் வளர ஆதரிக்கிறது.
மேலும் ஊட்டச்சத்து ஈஸ்டில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சுவையூட்டலில் பீட்டா-குளுக்கன் உள்ளது, இது ஒரு குறிப்பிட்ட வகை ஃபைபர் ஆகும். 

இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்பு அடர்த்தியை ஆதரிக்கிறது, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
என்னென்ன தேவை?

மைதா - 1 1/2 கப்

இன்ஸ்டன்ட் ஈஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

இத்தாலியன் ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன்

வெதுவெதுப்பான தண்ணீர் - 1/2 கப்

ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

வாயகன்ற கிண்ணத்தில் மைதா, இன்ஸ்டன்ட் ஈஸ்ட், இத்தாலியன் ஹெர்ப்ஸ், சர்க்கரை, உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.

பிறகு நடுவில் ஒரு குழி செய்து, தண்ணீர் ஊற்றி, மாவை ஒன்று சேர்த்து, 5 நிமிடங்கள் பிசையவும். ஈரமான துணி அல்லது க்லிங் வ்ராப் கொண்டு, 1 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.

இருமடங்காக மாவு பொங்கி எழுந்திருக்கும். இதை, மறுபடியும் நன்கு பிசைந்து, 1/2 இஞ்ச் தடிமனுக்கு வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ சப்பாத்தி போல இடவும்.
பேக்கிங் ட்ரே ஒன்றில், எண்ணெய் தடவி, சிறிது மாவு தூவி, அதன் மேலே, திரட்டிய மாவை வைக்கவும். அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

இதற்கிடையே, வெங்காயத்தை நீளமாக வெட்டவும். மைக்ரோவேவ் அவனை 190 டிகிரி C ப்ரீ ஹீட் செய்யவும். மாவும் இந்நேரம், சிறிது (1 இஞ்ச்) பொங்கி இருக்கும். இதில், உங்கள் விரல் கொண்டு அழுத்தி, குழிகள் இடவும்.

இதில், தாராளமாக ஆலிவ் எண்ணெய் ஊற்றவும். வெட்டிய வெங்காயத்தை அதன் மீது பரப்பவும். 13-15 நிமிடங்கள் வரை பொன்னிறமாக மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யவும். 
ஃபோக்காச்சா பேக்கிங் ட்ரேயில் ஒட்டாமல் நகர வேண்டும்.

10. சதுரமாக வெட்டி சூப்புடன் பரிமாறலாம்.

உங்கள் கவனத்துக்கு...

வெங்காயத்துடன், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி சேர்க்கலாம். இங்கு இன்ஸ்டன்ட் ஈஸ்ட் உபயோகிக்கப் பட்டுள்ளது. 

இதை மாவுடன் அப்படியே சேர்த்து பிசையலாம். இதர வகை ஈஸ்ட் உபயோகித்தால், முதலில் தண்ணீரில் கரைத்து, அதை மாவு பிசைய உபயோகிக்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)