முட்டை மஃபின் செய்முறை | Egg Muffin Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையானவை

முட்டை - 6

ஷ்ரெட்டட் சீஸ் - 6 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம்

உப்பு, மிளகு - சுவைக்கு

பொடியாக நறுக்கிய குடை மிளகாய்

கொத்தமல்லி

செய்முறை :
முட்டை மஃபின்

முதலில் மைக்ரோ அவனை 180 - 200C’ல் முற்சூடு செய்யவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை ஒடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்க வேண்டும் .

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்கயம், குடை மிளகாய், கொத்த மல்லி கலந்து விடவும். 

இப்பொழுது 6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவி பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவேண்டும் .

முற்சூடு செய்த அவனில் வைத்து 15 - 20 நிமிடம் பேக் செய்யவும்.

சுவையான முட்டை மஃபின் தயார்.
முட்டை மஃபின் செய்முறை | Egg Muffin Recipe ! முட்டை மஃபின் செய்முறை | Egg Muffin Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on October 31, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚