தேங்காய்த் துருவல் டூட்டி ஃப்ரூட்டி இட்லி செய்வது எப்படி?





தேங்காய்த் துருவல் டூட்டி ஃப்ரூட்டி இட்லி செய்வது எப்படி?

0
தேங்காய் இரண்டு மூடிகளையும் ஒரு இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் இட்லி அவிப்பது போல் தட்டில் தேங்காய் மூடிகளை வைத்து அவித்து எடுத்தால் ரொம்பவே சுலபமாக ஓட்டையும், தேங்காயையும் பிரித்து எடுத்து விடலாம். 
தேங்காய்த் துருவல் டூட்டி ஃப்ரூட்டி இட்லி
ஓட்டையும், தேங்காயையும் தனியாக பிரித்து எடுக்க இனி அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

இப்படி அவித்து எடுத்த பின்பு ஒரு கரண்டியின் பின் முனை அல்லது தேங்காய் எடுக்கும் கருவியை கொண்டு எடுத்துப் பார்த்தால் எளிதாக இரண்டும் தனித்தனியாக வந்து விடும். 

நீங்கள் இப்படி தனியாக பிரித்து எடுத்த பின்பு தேங்காய் உடைய பின் பகுதியில் இருக்கும் கருப்பு நிற தோல் இருக்கிறதா? இல்லையா? என்பதை பாருங்கள், அப்படி இல்லை என்றால் விட்டு விடலாம். 

தேங்காய் தோல் இருந்தால் அதனை நீங்கள் கேரட் மற்றும் உருளைகிழங்கு தோலை எப்படி சீவி எடுப்பீர்களோ அதே போல பீலர்(peeler) கொண்டு எடுத்தால் அழகாக வந்து விடும். 

அதன் பிறகு நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் போதும், ரொம்பவே மிருதுவான தேங்காய்ப்பூ கிடைத்து விடும். 

இந்த தேங்காய் பூவை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

என்னென்ன தேவை? 

இட்லி மாவு - 1 கிலோ, 

டூட்டி ஃப்ரூட்டி - 1/4 கிலோ, 

தேங்காய்த் துருவல் - 1/4 கிலோ, 

சர்க்கரை - 1/4 கிலோ. 
எப்படிச் செய்வது? 

தேவையான அளவு இட்லி மாவை எடுத்துக் கொண்டு டூட்டி ஃப்ரூட்டி, சர்க்கரை இரண்டையும் நன்றாக கொள்ளவும். பின்பு இட்லி தட்டை எடுத்து அதில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளவும். 

பின்னர் அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை இட்லி தட்டில் மாவை ஊற்றி, அதன் மேல் தேங்காய்த் துருவல் தூவி ஆவியில் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)