பனீர் பராத்தா செய்முறை | Baner Paratha Recipe !





பனீர் பராத்தா செய்முறை | Baner Paratha Recipe !

0
தேவையானவை:

பனீர் (துருவியது) – ஒரு கப்,

அம்சூர் பவுடர் – ஒரு டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்),

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லி – 4 டேபிள் ஸ்பூன்,

கரம் மசாலாத் தூள் – ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்,

கோதுமை மாவு – 2 கப்,

ஓமம் – ஒரு டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பனீர் பராத்தா
கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு, ஓமம், ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் 

பிசிறி, தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

துருவிய பனீர், இஞ்சித் துருவல், அம்சூர் பவுடர், உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், 
மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், கொத்த மல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.

மாவை சிறு உருண்டை களாக உருட்டி, சப்பாத்தியாக தேய்க்கவும். அதில் லேசாக எண்ணெய் தடவி, 

பனீர் கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் தேய்த்து, சூடான தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)