பனீர் செட்டிநாடு செய்முறை | Baner Chettinad Recipe !





பனீர் செட்டிநாடு செய்முறை | Baner Chettinad Recipe !

0
தேவையானவை:

பனீர் – 250 கிராம்,

தக்காளி (அரைக்கவும்),

வெங்காயம் (அரைக்கவும்) – ஒன்று,

உளுத்தம் பருப்பு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

கிராம்பு – 2,

பட்டை – சிறிய துண்டு,

பிரியாணி இலை – ஒன்று,

கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு,

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு. 

அரைக்க:

மிளகு – 10,

சீரகம் – 1 டீஸ்பூன்,

முந்திரி – 10,

கசகசா – ஒரு டீஸ்பூன்,

இஞ்சி – சிறிய துண்டு,

பூண்டு – 6 பல்,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

மிளகாய் வற்றல் – 4,

மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன். 

செய்முறை:
பனீர் செட்டிநாடு
பனீரை, ஒரு இன்ச் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள வற்றை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி… உளுத்தம்ப ருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப் பிலை தாளிக்கவும்.

இதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து சுருள வதக்க வும். 

பின் அரைத்து வைத்துள்ள மசாலா வையும் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும்.

இதில் நறுக்கிய பனீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். 

சுருளக் கிளறி, கொத்த மல்லி தூவி இறக்கிப் பரிமாறவும். இதை ‘செமி கிரேவி’ யாகவும் செய்து பரிமாறலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)