வாழைப்பூ பஜ்ஜி செய்வது எப்படி?





வாழைப்பூ பஜ்ஜி செய்வது எப்படி?

0
வாழைப்பூ என்பது வாழையின் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பதுண்டு. இவ்வாழைப்பூ உணவு சமைக்க காய்கறியாகப் பயன்படுத்தப் படுகிறது. 
வாழைப்பூ பஜ்ஜி
குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் வாழைப்பூவைக் கொண்டு செய்யப் படுகின்றன. 

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. 

வாழைப்பூவின் முதல் நன்மையாகப் பார்க்கப்படுவது பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும். வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்னைகளுக்கு சரியான தீர்வாகும். 

ரத்தத்தில் தேவையில்லாத கொழுப்புகளை சரி செய்யும். மேலும் ரத்த ஓட்டம் சீராகும். குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ஸ்நாக்ஸ் செய்முறையை பார்க்கலாம்.

தேவையானவை:

சுத்தம் செய்த வாழைப்பூ – ஒரு கப் (வாழைப் பூவை நரம்பு நீக்கி, ஒரு ஒரு இதழாக முழுமையாக எடுத்துக் கொள்ளவும்).

எண்ணெய் – தேவையான அளவு.

கரைத்துக் கொள்ள:

கடலை மாவு – அரை கப்,

அரிசி மாவு – 4 டீஸ்பூன்,

மஞ்சள் தூள், பெருங்காயம் – தலா ஒரு சிட்டிகை,

இட்லி மாவு – 3 டீஸ்பூன்,

சோள மாவு – ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, மிளகாய் தூள், இட்லி மாவு, உப்பு சேர்த்து நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு வாழைப்பூவாக எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

அவ்வளவு தான் இப்போது சூப்பரான வாழைப்பூ பஜ்ஜி ரெடி.

குறிப்பு:

இட்லி மாவுக்குப் பதில் 2 டீஸ்பூன் காய்ந்த உளுத்த மாவையும் சேர்க்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)