டேஸ்டியான வாழைப்பூ கட்லெட் செய்வது எப்படி?





டேஸ்டியான வாழைப்பூ கட்லெட் செய்வது எப்படி?

வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும்  குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
வாழைப்பூ கட்லெட் செய்வது
கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம். 

வெள்ளைப் படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல்  கட்டுப்படும்.

வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை  நீங்கும். 
ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன?
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். 

இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

துவர்ப்பு சுவை மிக்க வாழைப்பூ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாழைப்பூ வடை, வாழைப்பூ கூட்டு இவற்றிற்குப் பதிலாக வாழைப்பூ கட்லெட் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆசையாக ருசிப்பீர்கள். செய்முறை இதோ…
தேவையானவை

பெரிய வாழைப்பூ – 1

அவித்த உருளைக் கிழங்கு – 3

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 6

தயிர் – 1 கப்

கடலை மாவு – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சோம்பு – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

ரீபைண்ட் ஆயில் – பொரிப்பதற்கு (தேவையான அளவு)

ரொட்டித் தூள் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் பொடியாக அரிந்து போட்டு அதில் தயிரை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறியதும் கெட்டியாகப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும்.
அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லா வற்றையும் நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும்.
கட்லெட் வடிவில் செய்து ரொட்டித் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.
Tags: