சுவையான வாழைப்பழம் கேக் செய்வது எப்படி?





சுவையான வாழைப்பழம் கேக் செய்வது எப்படி?

0
உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை வழங்கி, நமது உடல்நலனை பாதுகாக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் நார்சத்து, வைட்டமின், தாதுக்கள், மெக்னீசியம், சர்க்கரை, பொட்டாசியம், கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு நன்மை தரும்.
சுவையான வாழைப்பழம் கேக் செய்வது எப்படி?
செரிமான விசயத்திற்கு பேருதவி செய்யும் நார்ச்சத்தை கொண்டுள்ள வாழைப்பழம், குடலின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும். ஆனால், இதனை அதிகம் சாப்பிட்டால் தீங்கு ஏற்படும். 

வாழைப்பழத்தில் சராசரியாக 100 கலோரி இருக்கும். ஆகா நாம் தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அதற்கு மேல் சாப்பிடும் பட்சத்தில் உடலின் எடை அதிகரிக்கும். 

பொட்டாசியத்தின் அளவு காரணமாக தலைசுற்றல், வாந்தி, நாடித்துடிப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனை ஏற்படும். வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் பற்களில் துவரம் ஏற்படலாம்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு பற்களை கொப்புளித்து தூங்குவது நல்லது. வைட்டமின் பி6 உடலுக்கு தேவையானது என்றாலும், அளவு அதிகமானால் நரம்பு பாதிப்பு ஏற்படலாம். 

சிலருக்கு ஒவ்வாமை, பக்கவிளைவும் உண்டாகும். பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் இருப்பதால், அதனை சாப்பிடுவது வாயு தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகும்.
தேவையானவை

மைதா மாவு : 250 கிராம்

சக்கரைப் பவுடர் : 250 கிராம்

வெண்ணெய் : 200 கிராம்

வாழைப்பழம் : 250 கிராம்

வாழைப்பழ எசன்ஸ் : 1 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் : 1/4 டீஸ்பூன்

சோடியம் பை கார்பனேட் : 1 டீஸ்பூன்

உலர் திராட்சை : 125 கிராம்

பேக்கிங் பவுடர் : 1 டீஸ்பூன்

ஆப்ப சோடா : 1/2 டீஸ்பூன்

கோழி முட்டை : 4

செய்முறை :
வாழைபழம் கேக்
சல்லடையில் மைதா மாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா ஆகிய இரண்டையும் சலித்துக் கொள்ளவும். வாழைப் பழத்தையும் சோடியம் பை கார்பனேட்டை யும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும். 

வெண்ணெயை, சக்கரைப் பவுடருடன் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி முட்டையை நுரை பொங்க அடிக்க வேண்டும். 
அடித்த முட்டை யுடன், வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும். முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி, எசன்சுகள் அனைத்தையும் நன்கு பிசைந்து கலவையிட வேண்டும்.
ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பர் போட்டு, வெண்ணெய் தடவி, கலவையை ஊற்றி அடுப்பில், சுமார் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வெந்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ கேக் தயார். 

குறிப்பு

உங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.

பிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)