மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் செய்வது எப்படி?





மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் செய்வது எப்படி?

0
பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியை ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் மூலம் சரி செய்ய வேண்டுமானால், மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் ரெசிபியை செய்து கொடுங்கள். 
மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் செய்வது எப்படி?
இந்த ரெசிபியானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் செய்யக் கூடியது. குறிப்பாக வேலைக்கு செல்வோர் காலையில் இதை முயற்சி செய்து பார்க்கலாம். 

மயோனைஸ் முழுக்க முழுக்க முட்டை வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு, எலுமிச்சை சாறு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி மிக்ஸியில் அரைத்து தயாரிக்கப் படுவதாகும். 

கிராமத்துக் கோழிக் குழம்பு செய்வது எப்படி?

அப்படி தயாரிக்கப்படும் மயோனைஸ் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவான உணவுப் பொருள் என்கின்றனர்.

ஆய்வுகள் மூலம் அறியப் பட்டதில் இதை சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்கப்பட வில்லை எனில் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்து விடுமாம். 

கடைகளில் விற்கப்படுவதில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப் படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படுவது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

இப்போது அந்த மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா.
என்னென்ன தேவை?

பிரெட் ஸ்லைஸ் – தேவைக்கேற்ப,

3 முட்டை யில்லாத மேயனைஸ் சாஸ் – தேவைக்கேற்ப,

இத்தாலியன் பெஸ்தோ சாஸ்-தேவைக்கேற்ப,

தக்காளி சாஸ் – சிறிது,

நறுக்கிய கொத்த மல்லி – 2 டேபிள் ஸ்பூன்,

நெய் – சிறிது, 

பீநட் பட்டர் – தேவைக்கேற்ப.

குஜராத்தி சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

எப்படிச் செய்வது?
மயோனைஸ் - பெஸ்டோ சீஸ் வித் சாண்ட்விச் செய்வது எப்படி?
பிரெட்டின் ஓரங்களை நீக்கவும். ஒரு லேயரில் பீநட் பட்டர் தடவவும். 

அடுத்த லேயரில் மேயனைஸ் சாஸ், அதற்கடுத்த லேயரில் பெஸ்தோ சாஸ் தடவி கொத்த மல்லி தூவி இன்னொரு பிரெட் ஸ்லைஸால் மூடி பிரெட் டோஸ்டரில் 
அல்லது தோசைக் கல்லில் சிறிது நெய் விட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு அடுக்காக அப்படியே வெட்டி தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)