சுவையான கோதுமை - பனீர் கேக் செய்வது எப்படி?





சுவையான கோதுமை - பனீர் கேக் செய்வது எப்படி?

0
சரும அழகின் உச்சத்தை உணர்த்த, `கோதுமை நிறம்' என்பார்கள். அதிலும் பெண்களின் நிறத்தைக் கோதுமையோடு ஒப்பிட்டுப் பேசுவார்கள். அந்த அளவுக்கு உயர்வானது கோதுமை.
சுவையான கோதுமை - பனீர் கேக் செய்வது எப்படி?
தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களின் வணிகங்களைவிட அதிகம் செய்யப்படுவது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாக இருக்கும். 

இது நல்லதொரு உணவு மட்டுமல்ல, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் வாய்ந்தது என்றால் மிகையாகாது.

இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கும் சர்க்கரை நோய் பிரச்னைக்குப் பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. 
அதிலும் குறிப்பாக சம்பா கோதுமை சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மொத்தக் கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் கணிசமாகக் குறைக்கிறது. 

ஆகவேதான் நம் வைத்தியர்கள் இதை ஒரு மருந்தாகக் கருதுகிறார்கள். சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன.

பொதுவாக, கோதுமை பலதரப்பட்ட மண்ணில் குறிப்பாக நடுத்தர முதல் கனமான மண் வரையிலும் நன்றாக செழித்து வளரும். நன்கு வடிகால் வசதி கொண்ட களிமண், கோதுமை பயிரிடுவதற்கு மிகவும் சிறந்த மண் வகை ஆகும்.
என்னென்ன தேவை?

பனீர் துண்டுகள் - 20

கோதுமை மாவு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்புக்கு சற்று அதிகமாக

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன்

டூட்டி ஃப்ரூட்டி - 3 டேபிள் ஸ்பூன்

பால் - ஒரு கப் (காய்ச்சி ஆற வைத்தது)

எப்படிச் செய்வது?
கோதுமை - பனீர் கேக்
முதலில் பேக்கிங் அவனை 180° செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். 

பனீரைக் கைகளால் நன்கு உதிர்த்து சர்க்கரை, எண்ணெய், வினிகர் சேர்த்துக் கலக்கவும்.கோதுமை மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்துச் சலிக்கவும். 
இதனுடன் ஏலக்காய்த் தூள், பனீர் கலவை, டூட்டி ஃப்ரூட்டி, பால் சேர்த்துக் கலக்கவும்.

இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, ப்ரீஹீட் செய்த அவனில் 35 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். கோதுமை - பனீர் கேக் ரெடி!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)