டேஸ்டியான வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?





டேஸ்டியான வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?

0
பலரும் விரும்பிச் சாப்பிடுவதில் சாக்லெட், ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கு தனி இடம் உண்டு. அதே போல தான் கப் கேக்கும். 1796-ம் ஆண்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சமையல் கலைஞர் அமெலியா சைமன்ஸ் என்பவரால் கப் கேக் செய்யும் முறை கண்டறியப்பட்டது. 
டேஸ்டியான வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி?
1828-ல் வெளியான எலிஸா லெஸ்லீஸ் என்ற சமையல் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற 75 உணவில் இந்த கப் கேக்கும் ஒன்று. 

19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சின்னச் சின்ன கப்கள் மற்றும் மண்ணால் ஆன பாண்டத்தில் கேக் கலவையை வைத்து அடுப்பில் சுட்டு எடுத்தனர். 

பெர்ரி கேக், பட்டி கேக், கப் கேக் போன்ற பெயர்களில் தயாரிக்கப்பட்ட கப் கேக், பல சுவைகளிலும் செய்யப்பட்டது. 
சாக்லெட் பிரியர்களின் சந்தோஷத்தை அள்ளும் விதமாக, சாக்லெட் கப் கேக்குகளும் செய்யப்பட்டன. ஆரம்பத்தில், கப் கேக் என்பதை இருவிதமாக புரிந்து கொண்டனர். 

அதாவது, கேக் செய்யத் தேவையான மூலப்பொருட்களை, குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள கப்பினால் அளந்து அளந்து செய்வது முதல் வகை. 

கப் போன்ற சின்னச்சின்ன மண் பாண்டத்தில் மூலப்பொருட்களை நிரப்பி, வெப்பப்படுத்தி எடுப்பது இரண்டாம் வகை. 
சரி இனி 
மைதா வெனிலா எசன்ஸ் பயன்படுத்தி டேஸ்டியான வெண்ணிலா கப் கேக் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

என்னென்ன தேவை?

மைதா 200 - கிராம்

சர்க்கரை 150 - கிராம்

வெண்ணெய் - 115 கிராம்

முட்டை - 3

பால்-  60 மிலி

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு

ஃப்ரோஸ்ட் செய்ய:

கிரீம் சீஸ்  - 50 கிராம்

பவுடர் சுகர்  -40 கிராம்

ரேஸ்பெரி ஜாம்  - ஒரு தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
எப்படி செய்வது?
வெண்ணிலா கப் கேக்
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மைதா, பேக்கிங் பவுடரை ஒன்றாக சேர்த்து சலித்து உப்பை சேர்த்து கொள்ளவும். வெண்ணெயை அறை வெப்ப நிலையில் உருக்கிக் கொள்ளவும்.

வெண்ணெயை நன்கு அடித்துக் கொள்ளவும். சர்க்கரையை அதனுடன் சேர்த்து கலக்கவும். முட்டையை நன்கு அடித்து கலக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொள்ளவும். 

பாலையும், மாவையும் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்தில் கலக்கவும். அதிகம் அடிக்காமல் பக்குவமாக கட்டி இல்லாமல் கலக்கவும். கப் கேக் ட்ரேவில் பாஸ்டல்களை (ஜீணீstணீறீ) அடுக்கி, மாவினை பிரித்து ஊற்றவும். 
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 25 நிமிடம் வரை வைக்கவும். நன்கு பொன்னிற மானதும் வெளியே எடுத்து, நன்கு ஆற விடவும். ஃப்ரோஸ்டிங் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். 

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிரீம் பதத்தில் அடித்துக் கொள்ளவும். பின் ஃப்ரோஸ்டிங் கோனில் கிரீமை நிரப்பிக் கொள்ளவும். வேண்டிய வடிவத்தில் அலங்கரிக்கவும். 

சுவையான வெனிலா கப் கேக் வித் ரேஸ்பெரி கிரீம் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)