நாஸி பிரியாணி செய்முறை | Naasi Biriyani !





நாஸி பிரியாணி செய்முறை | Naasi Biriyani !

0
தேவையானவை:

பாஸ்மதி அரிசி – 2 கப்,

சின்ன வெங்காயம் – 8,

பாண்டன் இலை – ஒன்று,

கண்டன்ஸ்ட் மில்க் (இனிப்பு சேர்க்காதது) – 1/4 கப்,

துருவிய கேரட் – 2 டேபிள் ஸ்பூன்,

கொத்த மல்லித் தழை, குங்குமப்பூ – சிறிது,

பால் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:

பட்டை – ஒரு விரல் அளவு, காய்ந்த மிளகாய் – 2,

கிராம்பு – 3,

ஏலக்காய் – 2,

அன்னாசிப்பூ – ஒன்று,

எண்ணெய் – 1/4 கப்,

நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
நாஸி பிரியாணி செய்முறை
சின்ன வெங்காயத்தை வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கவும். அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். 

இரண்டு டேபிள் ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து

சூடானதும் நறுக்கிய வெங்காய த்தைச் சேர்த்து பொன்னிற மாகப் பொரித்து எடுத்து விட்டு, தாளிப்புப் பொருட்கள் மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும். 

பாண்டன் இலையை முடிச்சிட்டு, கலவையில் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் இரண்டரை கப் (அரிசி அளந்த அதே கப்) தண்ணீர் சேர்க்கவும். 

கொதி வந்ததும் கண்டன்ஸ்ட் மில்க், உப்பு சேர்த்து, ஊற வைத்த பாஸ்மதி அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கிளறவும்.

தண்ணீர் சுண்டியதும் கீழே `தம் ப்ளேட்’ போட்டு, அதில் பாத்திர த்தை வைத்து நன்கு மூடி, மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும்.

பின்பு மூடியைத் திறந்து கிளறி விட்டு, குங்குமப்பூ பாலைச் சேர்க்கவும் (நிறம் போதவில்லை என்றால் மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கலாம்). 

நறுக்கிய கொத்த மல்லித் தழை சேர்த்து, மீண்டும் மூடி வைத்து, 10 பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.

பரிமாறும் முன் பிரியாணியை நன்கு கிளறி, பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)