குயே உபி காயூ (மரவள்ளிக்கிழங்கு கேக்) செய்முறை | Kuye Ubi Kaavu !





குயே உபி காயூ (மரவள்ளிக்கிழங்கு கேக்) செய்முறை | Kuye Ubi Kaavu !

0
தேவையானவை:

துருவிய மரவள்ளிக் கிழங்கு – ஒரு கப்,

தேங்காய்ப் பால் – 1/4 கப்,

பாண்டன் இலை – 3,

தண்ணீர் – அரை கப்,

சர்க்கரை – 3/4 கப்,

தேங்காய்த் துருவல் – ஒரு கப்,

யெல்லோ மற்றும் பிங்க் ஃபுட் கலர் – சிறிதளவு,

உப்பு – 1/4 டீஸ்பூன்.

செய்முறை:
குயே உபி காயூ (மரவள்ளிக்கிழங்கு கேக்)
துருவிய மரவள்ளிக் கிழங்கை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் கொர கொரப்பாக ஒரு சுற்று சுற்றி பாத்திரத்தில் சேர்க்கவும். 

பாண்டன் இலையுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கிழங்கில் சேர்க்கவும்.

பின் தேங்காய்ப் பால், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கரைக்கவும். 

இரண்டு சிறிய, அடி சமமான பாத்திரத்தின் உள்ளே லேசாக எண்ணெய் தடவி, கலவையை இரண்டிலும் சமமாக ஊற்றவும்.

ஒன்றில் யெல்லோ கலரையும், மற்றொன்றில் பிங்க் கலரையும் சேர்த்து ஆவியில் (புட்டிங் வேக வைப்பது போன்று) 

அரை மணி நேரம் வேக விட்டு இறக்கி, ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

ஒரு தட்டில் தேங்காய்த் துருவலை பரவலாகச் சேர்த்து, அதில் குயே உபி காயூவைக் கவிழ்த்து, நன்றாகப் புரட்டி எடுத்து துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)