காயா (ஜாம்) செய்முறை | Gaya Jam Recipe !





காயா (ஜாம்) செய்முறை | Gaya Jam Recipe !

தேவை யானவை: 

கெட்டியான முதல் தேங்காய்ப்பால் - அரை டம்ளர்,

முட்டை - 2 (விரும்பா தவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன் படுத்தலாம்),

பாண்டன் இலை - ஒன்று (இதற்கு மாற்றாக, லவங்கப் பட்டை பயன்படுத்தலாம்),

பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 1/4 டம்ளர்.

செய்முறை: 
 காயா (ஜாம்) செய்முறை
டபுள் பாய்லர் முறையில் இந்த ஜாமை பக்குவமாகக் கிளற வேண்டும். அதாவது, ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீரைச் சூடுபடுத்தவும்.

அதற்குள் மற்றொரு பாத்திரம் வைத்து, அதில் தேங்காய்ப் பால், பிரவுன் சுகர் சேர்க்கவும்.

பாண்டன் இலை நீளமாக இருப்பதால், அதை இரண்டு மூன்றாக மடக்கி, இலையின் நுனியாலே முடிச்சுப் போட்டு, அதில் சேர்க்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு,

இந்தப் பாத்திரத்தை மேலே வைத்து (ஏற்கெனவே இருக்கும் நிலையில்) சர்க்கரை கரையும் வரை கிளறவும்.

சர்க்கரை கரைந்த தும் ஜாம் கலவைப் பாத்தி ரத்தை கீழே இறக்க வும். கலவை மிதமான சூட்டில் இருக்கும். 

இப்போது அடித்த முட்டையை இந்தக் கலவை யுடன் சேர்த்து ஒன்று சேர, நன்கு அடித்துக் கலக்கி, 

பின்னர் மீண்டும் அந்தத் தண்ணீர் பாத்திர த்தின் மேல் வைத்து, மிதமான தீயில் கை விடாமல் கிளறவும். 

கலவை கொதிக்க ஆரம்பி க்கும் முன் ஓரத்தில் ஒட்டுவது போன்று தோன்று ம். அப்படி ஒட்டாத வண்ணம் நன்கு கிளறி க்கொண்டே இருக்க வும்.

15 நிமிடங்க ளுக்குள்ளா கவே கொஞ்சம் கெட்டியாகி விடும். கரண்டி யால் எடுத்து அதிலேயே ஊற்றிப் பார்த்தால், நெய் ஊற்றுவது போது விட்டு விட்டு விழும். 

இந்தப் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, கை படாமல் கரண்டி யாலேயே பாண்டன் இலையை வழித்து எடுக்கவும். 

ஜாம் ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் சேமித்து, ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரம்வ ரை பயன்ப டுத்தலாம்.

இதை பிரெட்டில் தடவி சாப்பிட, அருமை யாக இருக்கும்.
Tags: