சில்லி பனீர் செய்முறை | Chilli Paneer Recipe !





சில்லி பனீர் செய்முறை | Chilli Paneer Recipe !

0
தேவையானவை:

பனீர் – 250 கிராம்,

குடமிளகாய் – ஒன்று (நறுக்கவும்),

துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்,

வெங்காயத் தாள் – 4,

நறுக்கிய பச்சை மிளகாய் – 3,

சோயா சாஸ், சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்,

சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

கரைத்துக் கொள்ள:
மைதா, சோள மாவு – தலா கால் கப்,

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை:
சில்லி பனீர்
கரைத்துக் கொள்ள கொடுத் துள்ளவற்றை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். 

நறுக்கிய பனீர் துண்டுகளை இதில் முக்கி, சூடான எண்ணெ யில் பொரித்து தனியே வைக்கவும்.

வேறு கடாயில் எண்ணெயை சூடாக்கி… இஞ்சி, பூண்டு, வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… 

2 நிமிடம் கழித்து நறுக்கிய குடமிளகாய், சோயா சாஸ், உப்பு, சர்க்கரை சேர்த்து, சோள மாவைத் தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கிளறவும்.

பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்துப் புரட்டி, நறுக்கிய வெங்காயத் தாள் இலைப் பகுதியை இதன் மேல் தூவி இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)