செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை | Chettinad Fish Curry Recipe !

Subscribe Via Email

பக்குவமாக மீன்குழம்பு வைத்தாலே வாசனை ஊரைத் தூக்கும். இது செட்டி நாட்டு மீன்குழம்பு.
செட்டி நாட்டு மீன் குழம்பு
பின் வரும் பக்குவத்தில் இதை வைக்கும் போதே மூக்கு அந்த வாசனையை மோப்பம் பிடிக்கும். வாயை `ஆஹா’ சொல்ல வைக்கும்.

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 200 கிராம்

பூண்டு (உரித்தது )- ஒரு கைப்பிடியளவு

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

தனியாத் தூள் - 2 டீஸ்பூன்

புளி - எலுமிச்சம்பழஅளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

அரைக்க:

தேங்காய்த் துருவல்-1/2 மூடி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு போட்டு கலக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். 

புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

குழம்பு கொதிக்கும் போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டி நாட்டு மீன் குழம்பு ரெடி. 

இந்த செட்டி நாட்டு மீன் குழம்புக்கு இன்றளவும் மவுசு அதிகம்.
செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை | Chettinad Fish Curry Recipe ! செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை | Chettinad Fish Curry Recipe ! Reviewed by Fakrudeen Ali Ahamed on September 17, 2018 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close