சூப்பரான தந்தூரி சிக்கன் செய்வது எப்படி?





சூப்பரான தந்தூரி சிக்கன் செய்வது எப்படி?

0
தந்தூரி சிக்கன் என்பது தெற்காசியா உணவாகும், தயிர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து ஊற வைக்கப்பட்டு செய்யப்படும் உணவாகும். 
சூப்பரான தந்தூரி சிக்கன் செய்வது எப்படி?
இது ஒரு உருளை வடிவ களிமண் அடுப்பில் வறுத்தெடுக்கப் படுகிறது. தற்பொழுது இந்த உணவு உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகும்.

தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால், இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

வறுத்த, பொரித்த உணவுகளுடன் ஒப்பிடுகையில், தந்தூரியில் கலோரி மிகவும் குறைவு. பொரித்த உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதுடன், கொழுப்பு மற்றும், பி.பி பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
தந்தூரி சிக்கன், மீன் மற்றும் பனீர் ஆகியவை அதிக புரோட்டினுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் நமக்குத் தருகின்றன.

சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும், தந்தூரி எப்போதும் நமக்கு அட்டகாசமானதொரு உணவாக மாறும்.

தேவையான பொருட்கள்
கோழி தொடை – 4

எண்ணெய் – 1/2 லிட்டர்

ஜிலேபி பவுடர் – சிறிது

மைதா மாவு – 50 கிராம்

கடலை மாவு – 50 கிராம்

சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்

எலுமிச்சை பழம் – 1

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)

செய்முறை:-
தந்தூரி சிக்கன்
கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.

(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க் காக) ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி, பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும். இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.

கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும். ( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.

கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)