டேஸ்டியான சிவப்பு அவல் பிரியாணி செய்வது எப்படி?





டேஸ்டியான சிவப்பு அவல் பிரியாணி செய்வது எப்படி?

ஊறவைத்த நெல்லை பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது அவல் ஆகும். முன்பு கைகுத்தல் முறையில் அவல் தயாரிக்கப்பட்டன. 
சிவப்பு அவல் பிரியாணி
தற்போது மிஷின்கள் மூலம் தட்டையான அவல் கிடைக்கின்றது. இந்த முறையில் தயார் செய்வதால் அதில் உள்ள முழுசத்தும் நமக்கு கிடைக்கிறது.

அரிசியின் வகைகளுக்கு தகுந்தார் போல அவலும் மாறுபடும். உதாரணமாக சிகப்பு அரிசியில் இருந்து சிகப்பு அவல், வெள்ளை அரிசியில் இருந்து வெள்ளை அவல் தயாரிக்கின்றார்கள்.

அவல் பிரபலமான உணவு. சிவப்பு அவல் மசாலா பொருள்களுடன் சேர்த்து தயாரிக்கும் போது அது மேலும் சுவையூட்டும் உணவாக அனைவரும் விரும்பும் உணவாக உள்ளது. இதை அரிசிக்கு மாற்றாக எடுத்து கொள்ளலாம்.  

சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு சிவப்பு அவல் உதவும். சிவப்பு அவல் புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்ல விடாமல் தடுக்க உதவலாம் என சொல்லப்படுகிறது. 
சிவப்பு அவலில் நார்ச்சத்து வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் இருந்து தயாரிக்க படுவதால் இது சத்து நிறைந்தது. 

உங்கள் சுவையை தூண்டும் சிவப்பு அவல் பிரியாணி சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சிவப்பு அவல் பிரியாணி ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

சிவப்பு அவல் - 2 கப்

வெங்காயம் - 1

கேரட், பீன்ஸ் துண்டுகள் - அரை கப்

தக்காளி - 2

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 3

லவங்கம் - 4

ஏலக்காய் - 2

பட்டை – சிறு துண்டு

சோம்பு - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - 4 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை - சிறிது

செய்முறை :

அவலைச் சுத்தம் செய்து, தண்ணீர் வடித்துப் பத்து நிமிடம் ஊறவையுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுத் தாளியுங்கள். 

அதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு காய்கறிகள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். 
தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து வேக விடுங்கள். காய்கள் வெந்ததும் அவலைப் போட்டுக் கிளறுங்கள். அவல் உதிரியாக வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி வையுங்கள். 

ஐந்தே நிமிடங்களில்ல் சுவையான சிவப்பு அரிசி அவல் தயார்.
Tags: