பைனாப்பிள் பழப் பச்சடி செய்முறை | Pineapple fruit slash Recipe !





பைனாப்பிள் பழப் பச்சடி செய்முறை | Pineapple fruit slash Recipe !

என்னென்ன தேவை?

பைனாப்பிள் - 1,

நேந்திரம்பழம் - 3,

மஞ்சள் தூள் - 1/2 மேசைக் கரண்டி,

மிளகாய்த் தூள் - 1 மேசைக் கரண்டி,

தண்ணீர் - 1 டம்ளர்,

தேங்காய் - அரை மூடி துருவியது,

கடுகு - 1/4 மேசைக் கரண்டி,
காய்ந்த மிளகாய் - 3,

கறிவேப்பிலை,

தேங்காய் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,

தயிர் - 3 மேசைக் கரண்டி.

எப்படிச் செய்வது?
பைனாப்பிள் பழப் பச்சடி
பைனாப்பிள் மற்றும் நேந்திரப் பழத்தை சின்னச் சின்ன துண்டுக ளாக வெட்டிக் கொள்ளவும். 

அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.
மிக்சியில் தேங்காய்த் துருவல் மற்றும் கடுகு சேர்த்து நன்கு அரைத்து அதனை வேக வைத்துள்ள பழத்துடன் சேர்த்து ஒரு கொதி விடவும்.

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சடியில் சேர்க்கவும். 

கடைசியில் தயிர் சேர்த்து நன்கு கலந்து செய்து பரிமாறவும்.
Tags: