பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை செய்வது எப்படி?





பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை செய்வது எப்படி?

பாசிப்பருப்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பாசி பயறானது செரிமானத்தை மேம்படுத்த தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 
பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை
இப்பயறில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் குடலில் உணவுப்பொருட்கள் நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இது தனித்துவமான ஸ்டார்ச்சைக் கொண்டுள்ளது. 

இது செரிமானப் பாதையில் நல்ல பாக்டீரியாக்களின் செயலினைத் துரிதப்படுத்தி உணவினை நன்கு செரிக்க உதவுகிறது. மேலும் இப்பயிறில் காணப்படும் கார்போ ஹைட்ரேட் எளிதில் செரிமானம் அடையும் தன்மையைக் கொண்டுள்ளது. 

இதனால் மற்ற பயறுகளைவிட பாசி பயறானது எளிதில் செரிமானம் அடைவதுடன் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

பாசி பயறில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

இப்பயறில் காணப்படும் புரதச்சத்தானது இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடிய என்சைம்களின் செயல்பாடுகளைத் தடை செய்கின்றன. 

எனவே பாசிபயறினை அடிக்கடி உணவில் சேர்த்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கலாம்.இன்று பாசிப்பருப்பு, காய்கறிகள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மூங்தால் (பாசிப்பருப்பு) - 2 கப்,

ரவை - 1 கப்,

பச்சை மிளகாய் - 3,

காய்ந்த மிளகாய் - 4,

சீரகம் - 1 ஸ்பூன்,

உப்பு - தேவையானவை

தேவையானவை :

கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கியது வகைக்கு - 1 கப்,

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 3,

உப்பு - தேவையானது,

கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு

செய்முறை :

வெங்காயம், காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன் றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும். 

செய்முறை :

பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். 

அதில் ரவையைக் கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள 

காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Tags: