கறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe !





கறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe !

தேவையானவை

பிஞ்சு சுண்டைக்காய் – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 4

புளி – நெல்லிக்காய் அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

பெருங்காயத் தூள் – சிறிதளவு

எண்ணெய் – தாளிக்க

செய்முறை
கறிச் சுண்டைக்காய் பச்சடி செய்முறை | Karic Cuntaikkay Scratch Recipe !

* துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

* சுண்டைக் காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

* தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சுண்டைக் காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.

* சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சடி ரெடி.
Tags: