டேஸ்டியான பழ கேக் செய்வது எப்படி?





டேஸ்டியான பழ கேக் செய்வது எப்படி?

நமது உடலில் 80% நீர் உள்ளது. அதே போல், பழங்களிலும் 80% நீர்ச் சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச் சத்து அதிகம் இருப்பது நல்லது. 
டேஸ்டியான பழ கேக் செய்வது எப்படி?
அப்படிப்பட்ட உணவுகள் முக்கியமாகப் பழங்களும் காய்கறிகளும் தான். பழங்களில் உடலுக்கு அதிகம் சேரக் கூடாத கெட்ட கொழுப்புச் சத்துக்கள் இல்லை. 

ஆனால், பால், மாமிசம் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. 

அநேகம் பேருக்குத் தெரியாத ஒரு விஷயம், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள் தான். பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. 

இதற்கு என்ன காரணம் என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றனர். நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் ஞாபகத்துக்குக் கொண்டு வரலாம். 
பரீட்சைக்குத் தயாராகும் குழந்தைகள் பழம் சாப்பிடுவது நல்லது. இது நிச்சயம் தேர்வில் வெற்றியைப் பெற்றுத் தரும். இன்று நாம் பேரீச்சம் பழம் வைத்து டேஸ்ட்டான பழ கேக்கினை செய்ய உள்ளோம். 

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை மிக சிறப்பாக இருக்கும். வாருங்கள்! டேஸ்ட்டான பழ கேக்கினை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

என்னென்ன தேவை?
காய்ந்த திராட்ஷைப் பழம் – 1 1/2 கப்,

கொட்டை எடுத்த பேரீச்சம் பழம் – 1 1/2 கப்,

பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்,

முந்திரிப் பருப்பு – 1/2 கப்,

ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி,

பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி,

வெனிலா எஸ்ஸென்ஸ் – 10 சொட்டு,

வெண்ணெய் – 1 1/2 கப்,

சர்க்கரை – 1 1/2 கப்,

முட்டை – 4,

மைதா – 3/4 கப்,

தேன் – 1/2 கப்.

எப்படிச் செய்வது?
பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப் பருப்பைச் சிறிது பன்னீர் விட்டு அரைக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்துக் கொள்ளவும். 

சீனியையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும்.
பிறகு அரைத்த முந்திரிப் பருப்பையும் தேனையும் கலந்து அடிக்கவும். கடைசியில் வெள்ளைக் கருவை கலக்கவும். மாவு கலந்த பிறகு அதிகமாகக் கடையக் கூடாது. 

மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். 

அவற்றையும் எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து, வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்
Tags: