கறிவேப்பிலை இட்லி செய்வது எப்படி?





கறிவேப்பிலை இட்லி செய்வது எப்படி?

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கறிவேப்பிலையின் நன்மைகள் சொல்லி அடங்காது. கறிவேப்பிலை என்பது வாசனைக்காக மட்டுமே உபயோகிக்க கூடிய ஒரு வாசனை பொருள் என்றே நம்மில் பலரும் நினைத்து வருகிறோம்.
கறிவேப்பிலை இட்லி
இந்த கறிவேப்பிலையில் கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது. 

இந்த கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது. மேலும் உங்கள் உடலில் உள்ள தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது. 

இந்த கறிவேப்பிலையில் அதிகமான இரும்புச் சத்தும் இருக்கிறது. அதே நேரத்தில் போலிக் ஆசிட் இருக்கிறது. 

இவை இரண்டும் அதிகமாக இருக்கும் பொழுது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் அடியோடு குறைந்து விடும் என்று கூறுகின்றனர். முடிந்தவரை நம் உணவில் அதிகமான கறிவேப்பிலையை எடுத்துக் கொள்வது நல்லது.

தேவையானவை: 

மினி இட்லிகள் – 40 

நெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன் 

அரைக்க: 

கறிவேப்பிலை – 3 கப் 

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் 

காய்ந்த மிளகாய் – 4 

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் 

சீரகம் – ஒரு டீஸ்பூன் 

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன் 

பெருங்காயத் தூள் – ஒரு டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

கடுகு – அரை டீஸ்பூன் 

தாளிக்க: 

கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் 

காய்ந்த மிளகாய் – 2 

செய்முறை: 

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும், மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்தால் கறிவேப்பிலை பொடி ரெடி. 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். 

இத்துடன் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது, சிறிதாக ஊற்றி கிளறி இறக்கிப் பரிமாறவும்.
Tags: