ருசியான அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?





ருசியான அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

0
தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.
அவரைக்காய் முட்டை பொரியல்
உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து  கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும். வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 

அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
அவரைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். 

பித்தத்தினால்  உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.

அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள்  உறுதியாகும். 

அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருள்கள் :

அவரைக்காய் – 150 கிராம்

முட்டை – 1

எண்ணெய் – 3 மேஜைக் கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

மிளகு தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :
அவரைக்காய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும். அவரைக்காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
தயிர் சாதம் சாப்பிட்டு குண்டாகிட்டீங்களா?
முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத் தூள் சேர்த்து இறக்கவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)