பாகற்காய் பச்சடி செய்வது | Bitter Gourd Pachadi Recipe !





பாகற்காய் பச்சடி செய்வது | Bitter Gourd Pachadi Recipe !

என்னென்ன தேவை?
பாகற்காய் - 1 கப்

தடித்த தயிர் - 1 கப்

சிறிய வெங்காயம் - 5

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - சிறிது

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

அரைக்க...

தேங்காய் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:
பாகற்காய் பச்சடி
பாகற்காயைக் கழுவித் துடைத்து, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகிய வற்றை தோல் நீக்கி, பொடியாக நறுக்குங்கள். 

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து மிளகாயைக் கிள்ளிப் போடுங்கள். 

மிளகாய் வறுபட்டதும் பாகற்காயை சேருங்கள். நிதானமான தீயில் பாகற்காயை பத்து நிமிடம் வதக்குங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்குங்கள். 

நன்கு வதங்கிய பிறகு புளிக் கரைசலை சேருங்கள். அத்துடன் உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கெட்டி யான பிறகு இறக்குங்கள். 

இஞ்சி, பூண்டு மணமும் இனிப்பு, புளிப்பு, கசப்பு சுவைகளும் சேர்ந்து ஒரு கலக்கல் சுவை தரும் பச்சடி இது.
Tags: